அதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்

குமாரபாளையம், ஏப்.23: கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க, குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில் ஒரு கடை விட்டு ஒரு கடை அமைத்து, சமூக இடைவெளியை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டியுள்ளது. நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வினியோகித்து வருகின்றனர். முககவசம் கட்டாயமாக்கப்பட்டு, அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில், தினசரி மார்க்கெட்டில் காலை நேரங்களில் ஏராளமானோர் குவிவதால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை குறைக்கவும், அங்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. தொற்று கட்டுப்படாவிட்டால் ஷிப்ட் முறையில் ஒரு கடைவிட்டு ஒரு கடை மட்டும் திறக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>