ைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது:கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. தற்போது, மீண்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள், ஓட்டல்கள், டீ கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் பேருந்துகள் செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள், 11 அரசு மருத்துவமனைகளில் 410 படுக்கை வசதிகள், ஒரு தனியார் மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், 2 கொரோனாசிறப்பு மையங்களில் (கேர் சென்டர்) 560 படுக்கை வசதிகள் உட்பட மொத்தம் 15 இடங்களில் 1,470 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது.கொரோனா நோய் தொற்று சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>