வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு

திருப்பூர், ஏப். 19:  திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில்  நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் கருத்துரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இதே போல் தேர்தல் களப்பணியாற்றிய திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். கொரோனா தடுக்க கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமி நாசினியை ஆங்காங்கே முகாம் அமைத்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும். வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி வளாகத்தில் சுழற்சி முறையில் திமுகவினர், கூட்டணி கட்சியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>