செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

செய்யாறு, ஏப்.18: செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திடீரென நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு- ஆற்காடு சாலையில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் இடதுபுறம் பாம்பு புற்று உள்ளது. அந்த புற்றில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு தங்கியிருக்கிறது. அந்த பாம்பு இரைக்காக வெளியே வருவதும் பின்னர் புற்றுக்குள் சென்றுவிடுவதும் அடிக்கடி நடக்கும்.

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில், கோயிலின் வலதுபுறம் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது, அலுவலக வாயிலில் அந்த நாகப்பாம்பு படுத்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு குவிந்ததால், அச்சமடைந்த பாம்பு அங்குள்ள கல் இடுக்கில் மறைந்து கொண்டது. தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அருகில் உள்ள தூளி சமூக நலகாட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

Related Stories:

>