ஊட்டி மற்றும் புறநகர் பகுதியில் மழை

ஊட்டி, ஏப். 14: ஊட்டி மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்த நிலையில், தற்போது பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்யும். அதன்பின், நான்கு மாதங்கள் பனி பொழிவு காணப்படும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெயில் அடிக்கும். கோடை காலத்திலும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், முப்பருவங்களிலும் நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காலம் தவறி பருவமழை பெய்வதாலும், குறித்த நேரத்திற்கு மழை பெய்யாத நிலையில், கோடை காலங்களில் வறட்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இம்முறையும் மழை குறைந்து காணப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களிலும் விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக விவசாயம் மேற்க்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் பல்வேறு பகுதிகளிலும் தற்போது விவசாயம் செய்ய துவங்கியுள்ளனர்.

Related Stories:

>