பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு

பொன்னமராவதி, ஏப்.14: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக காளை உரிமையாளர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு விதித்து உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆர்.பாலக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் ஊர் பொதுமக்களின்றி காளை உரிமையாளர்கள் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு போலீசாரின் பாதுகாப்பை மீறி அவிழ்த்துவிட்டுள்ளனர். இதனை உலகம்பட்டி போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அப்போது, ஆர்.பாலகுறிச்சியில் விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான காளை தவறி விழுந்துள்ளது. தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிருக்கு போராடிய ஜல்லிக்கட்டு காளையை பத்திரமாக மீட்டனர்.

Related Stories: