பேருந்துகளில் அதிகளவில் நெருக்கமாக செல்லும் பயணிகள்

திருப்பூர், ஏப். 13: திருப்பூர் மாநகரப் பேருந்துகளில் அதிகப்படியான பயணிகளை ஏற்றி செல்வதால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் தொழில் நகரமாக உள்ளதால் திருப்பூர் மாநகரப் பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கொரோனா தொற்று மிக வேகமாக பெருகி வரும் சூழலில் பேருந்துகளில் நின்றவாறு பயணம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.  ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பேருந்துகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர். மேலும் நின்றவாறு பயணம் செய்ய அரசு தடை விதித்திருந்த சூழலில் அதனையும் போக்குவரத்து கழகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. எனவே அரசு விதிமுறைகளை பேருந்துகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories:

>