கடும் சோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் வாகனங்கள் செல்ல அனுமதி

திருப்பூர், ஏப். 13: தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ம் தேதி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் பார்வையாளர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அந்த மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழையும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் கடுமையாக சோதனையிட்ட  பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும், வாகனங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர்.

Related Stories: