திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிப்பு

திருப்பூர், ஏப். 13: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிக்கப்படும் என அரசு முதன்மை செயலர் கூறினார். கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.  இந்த ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை) கோபால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் கோபால் பேசயிதாவது: கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் 25.3.2021 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊடரங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போது  உள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில்  உருமாறிய கொரோன வைரசின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்கனின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோன வைரஸ் நோய் தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொது ஊடரங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12. 00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டடுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்ககை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தோடு அனைத்து துறையும் கொரோனாவை ஒழிக்க பணியாற்ற வேண்டும். மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி அடிக்க வேண்டும்.  பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் உள்ள இடங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், பொதுமக்கள் தானாக முன்வர வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

ஆய்வுகள்: முன்னதாக திருப்பூர் தாராபுரம் ரோடு, மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிட் தடுப்பூசி மையம், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பேருந்தில் பயணம் செல்பவர்கள் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதையும், மாநகராட்சி அருகில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருப்பூர் மங்கலம் சாலை கிரி நகர், பூச்சக்காடு பகுதியில் அமைந்துள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினையும் அதே பகுதியில் றடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாமினையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆலாங்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் மற்றும் தனியாணர் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்ந கோவிட் தடுப்பூசி மையத்தினையும், அரசு முதன்மைச் செயலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் மாநகர போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>