காளி,மன்னர் ேவடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை, ஏப்.13:தென் மாவட்டங்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் சித்திரை திருவிழா, மாரியம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட ஏராளமான விழாக்கள் நடைபெறும். விழாக்களை நம்பியே மைக்செட், தவில், நாதஸ்வர கலைஞர்கள், நாடக கலைஞர்கள், டிரம் செட், இன்னிசை, கரகாட்டம், நாட்டுப்புற கலைஞர்கள் என சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். கடந்த ஆண்டும் தற்போதும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்தில் 6 மாதம் மட்டுமே நடைபெறும் திருவிழாக்களை நம்பி உள்ள லட்சக்கணக்கான குடும்பத்தினர் வருவாய் இன்றி அரசு தரும் சொற்ப ஊதியத்தை நம்பியே உள்ளனர். எனவே திருவிழாக்களுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று அனைத்து கலைஞர்களும் தவில், நாதஸ்வரம் முழங்க காளி, மன்னர், ரஜினி, கமல் வேடமிட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலக வாசலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வலியுறுத்தினர். இதில் 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நான்கு பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதியளிக்கப்பட்டதையடுத்து மனு அளித்து சென்றனர்.

Related Stories: