15ம் தேதி மெகா பரிசோதனை மையம் பெரம்பலூரில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெரம்பலூர்,ஏப்.12: பெரம்பலூரில் ஒரேநாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக கடந்த 10ம்தேதி வரை 94,419 பேர்களுக்கும் நேற்று 11ம்தேதி மட்டும் 224 பேர்களுக்கும் என இதுவரை 94,643 பேர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த 10ம் தேதி வரை 2,342 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞர் 93 வயதுடையவருக்கும் மற்றும் அவரது 52 வயதுள்ள மருமகள், 23 வயதுள்ள பேரன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் துறைமங்கலத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன மேனேஜர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி 11ம்தேதி வரை 2,346 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 9 பேர், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 5 பேர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர், திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,

இதர தனியார் மருத்துவ மனைகளில் 6, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைையில் 1, அரியலூரில் 2, காஞ்சிபுரம், சென்னை தனியார் மருத்துவமனைகளில் தலா 1 என மொத்தம் 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 21 பேர் இறந்துள்ளனர். 7மாதங்களுக்கு பிறகு கடந்த 9ம் தேதி இரவு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற இளநிலை அமீனாவான, வேலூரை சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் பலியானதைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: