காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர், ஏப். 10:  திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் பலவஞ்சிபாளையம் அபிராமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ் குமார் (23). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் தாராபுரத்தில் உள்ள  உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போதும் அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து, அந்த பெண்ணை, தினேஷ்குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தினேஷ்குமாரை காதலித்து வந்த பெண் திடீரென்று காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்  தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>