பிரிண்டிங் கட்டணம் உயர்வு டெக்பா கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், ஏப். 10:  பிரிண்டிங் நிறுவனங்கள் சுயமாக கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ‘டெக்பா சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ்அசோசியேஷன் (டெக்பா) செயற்குழு கூட்டம், இடுவம்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் மரியவிக்டர் வரவேற்றார். கூட்டத்தில், ‘இங்க்’ விலை, கடந்த நான்கு மாதங்களில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக புக்கிங் செய்த ‘இங்க்’ உள்ளிட்ட மூலப்பொருட்கள் வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. வழக்கமாக 30 நாட்கள் கடனுக்கு இங்க் கிடைத்தது. தற்போது முன்பணம் செலுத்தினால் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் இங்க் வழங்குகின்றன. தொடர் பிரச்னைகளால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நூலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை என திருப்பூர் பிரிண்டிங் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இக்கட்டான சூழலில் பிரிண்டிங் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிறது. எனவே, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதிநிலை உட்பட பல்வேறு அம்சங்களை கணக்கிட்டு, பிரின்டிங் கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: