ஜெயங்கொண்டம் பகுதியில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

ஜெயங்கொண்டம், ஏப்.9: அரியலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகே விருத்தாசலம் சாலையில் மகிமைபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது முகக்கவசம் அணியாத 16 நபர்களுக்கு ரூ. 3200, சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைக்கு ரூ.1000 என மொத்தம் ரூ4,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆய்வின்போது ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய கட்டுப்பாடுகளின்படி பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை என்றும் பயணிகள், ஓட்டுனர், நடத்துனர் உட்பட பேருந்தில் உள்ள அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது .

Related Stories: