பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு

திருப்பூர், ஏப். 5:  பல்லடம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிளுடன், இறுதி நாளான நேற்று தொகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது: தற்போது, பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிர் குழுக்கள் கடன் தள்ளுபடி போன்ற தனி ஒரு பெண்களும் பயன்பெறும் திட்டங்களை அறிவித்து ஏழை பெண்களுக்கு ஒளிவிலக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

 இப்படி என்றென்றும் மக்களுக்காக மட்டுமே பணி செய்யும் தனித்துவமிக்க முதல்வராக பணியாற்றி இருக்கிறார். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு வாஷிங் மெசின், மாதம் ரூ.1500 நிதி, மகப்பேறு விடுமுறையை ஒரு ஆண்டாக அளிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா இலவசம். ஆண்டுக்கு 6 சிலிண்டர் என ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான, பெண்கள் பயன்பெறும் திட்டங்களை தருவதற்கு அறிவித்து இருக்கிறார். எனவே, பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது, அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: