ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவு பெருகி வருகிறது

ராமநாதபுரம், ஏப். 4: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கடந்த மார்ச் 13ல் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினர். தொடர்ந்து அவர், தொகுதிக்குட்பட்ட மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்கள், ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சிகள், மண்டபம் பேரூராசிக்குட்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  நாளுக்கு நாள் செல்லுமிடங்கள் எல்லாம் அவருக்கு மக்களின் ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிரசாரத்தில் போகலூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து தமிழக அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்க நிர்வாகிகள் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர்  கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு கூட்டணி கட்சி சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகைக்கடை பஜார், ஈசா பள்ளிவாசல் பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர் ரவிச்சந்திர ராமவன்னி, மாறன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன், முருகன், தாரிக்  தலைமையிலும், வேதாளையில் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தலைமையில் திமுக ஊடக தொடர்பு இணை செயலர் ராஜிவ் காந்தி தலைமையிலும் வாக்கு சேகரித்தார்.

Related Stories: