திருப்பூரில் 103 டிகிரி வெயில் அனல் காற்றால் பொதுமக்கள் அவதி திருப்பூர், ஏப்.2: திருப்பூரில் 103 டிகிரி வெயிலுடன் வீசிய அனல் காற்றால்

பொதுமக்கள் பெறும் அவதியடைந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை வெயிலும், மாலை குளிரும் என வித்தியாசமான சீதோசன நிலை இருந்து வந்தது. இதன் பின்னர் குளிர்காலம் நீங்கி கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே வரும் பலரும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மோர், நுங்கு, பதநீர் சர்பத், இளநீர், தர்பூசணி போன்றவை விற்பனை செய்யும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளனர். இந்த கடைகளில் தற்போது கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் 90 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்தது. ஆனால் நேற்று சற்றும் எதிர்பாராதவிதமாக வெயிலின் தாக்கம் 103 டிகிரி ஆக பதிவானது. இந்தகடும் வெயில் மற்றம் அனல் காற்று தாக்கம் காரணமாக  பொதுமக்கள்  அவதி அடைந்தனர்.

Related Stories: