ஓசூர் அருகே 1.5 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

ஓசூர், மார்ச் 31:ஓசூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 1.5 கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓசூர் அடுத்த கொத்தக்கொண்டப்பள்ளி சோதனைசாவடி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதாலட்சுமி தலைமையில் எஸ்ஐக்கள் சத்யா, ராஜேந்திரன் உள்ளிட்டோ வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கெலமங்கலம் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் பெங்களுரிலிருந்து 1419 கிராம் வெள்ளி கொலுசுகள், உரிய ஆவணமின்றி கொண்டுவந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ₹94 ஆயிரம் ஆகும். இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளி ரோட்டில் தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு ரமேஷ் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த ₹84 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரிடம் ஒப்படைத்தனர். அவர் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை ஓசூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: