பாலக்காடு, மார்ச் 26: பாலக்காடு மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு கோவை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.40 மணிக்கு பாலக்காடு ஸ்டேடியம் மைதானம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஷாபிபரம்பை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர், காரில் 12.30 மணிக்கு புறப்பட்டு பரளி, மங்கரை வழியாக பத்திரிப்பாலா, ஒத்தப்பாலம் ஆகிய இடங்களில் பேசுகிறார். அதன்பின், குளப்புள்ளி, ஓங்கல்லூர் வழியாக பட்டாம்பி, கூற்றநாடு ஆகிய பகுதிகளில் காரில் இருந்த படியே காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.