திருமானூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தீவிர பிரசாரம்

அரியலூர், மார்ச் 26: அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தா.பழூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லியும், ஒவ்வொரு கிராமத்திலும் செய்தப்பணிகள் குறித்து கூறி சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

அரசு தலைமை கொறடாவும், மாவட்ட கழக செயலாளரும் அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் நேற்று சுள்ளங்குடி கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி பெரியமறை, எழுநாச்சிபுரம், ஏலாக்குறிச்சி, செங்கரையான், கரையான்குறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, கீழவரப்பன்குறிச்சி, அழகியமணவாளன், மேலராமநல்லூர், கீழராமநல்லூர், நதியினூர், கா.மாத்தூர், தேளூர், குருவாடி ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியை அரசு மாதிரி மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தியது, அழகியமணவாளன் - மேலராமநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டியது, பாசன ஏரியான சுக்கிரன் ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைத்தது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் புதிதாக போடப்பட்டது, சிறுஏரிகள், குளங்களில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் நெல் வயல்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரியது என எண்ணற்ற பணிகளை இப்பகுதியில் செய்துள்ளேன். கூடுதல் பணிகளை மேற்கொள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் எத்தனையோ சாதனை திட்டங்களை அறிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க இரட்டையிலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்.பிரச்சாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் வடிவழகன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், பாமக மாவட்ட தலைவர் ரவிசங்கர், தமாகா விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: