மேஸ்திரி, கூலி தொழிலாளியிடம் ₹1.34 லட்சம் பறிமுதல் போளூர் அருகே பறக்கும் படை சோதனை

போளூர், மார்ச் 26: போளூர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேஸ்திரி, கூலி தொழிலாளியிடம் ₹1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போளூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் மனோகரன் தலைமையிலான குழுவினர் நேற்று போளூர்-வேலூர் மெயின்ரோடு முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவா(40) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரிடம் ₹50,200 ரொக்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.இதேபோல், சந்தவாசல் மெயின்ரோடில் பறக்கும்படை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த பாளைய ஏகாம்பரநல்லுர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் என்பவரிடம் சோதனை நடத்தினர். அப்போது, உரிய ஆவணம் இன்றி அவர் வைத்திருந்த ₹82,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

(தி.மலை) ₹1 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பு

தண்டராம்பட்டு, மார்ச் 26: தானிப்பாடி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி ஊராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் ₹1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு விஜயன், துணைத்தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ஆதாம்பாஷா ஆகியோர் பார்வையிட்டு, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: