குரும்பலூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் அருகே குரும்பலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வ ங்கடபிரியா நேரில்பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ள குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ள வேப்பூர் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேற்று (19ம்தேதி) பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா வருகை தந்து பார்வையிட்டுஆய்வுசெய்தார்.

ஆய்வின்போது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்படவேண்டிய தடுப்புகள் மற்றும் வாக்குப்பதிவு முடிவடைந்த பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்திட வேண்டிய வசதிகள், வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்ட இதர பொருட்கள் பாதுகாப்பாக வைக்கவேண்டிய அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டிய அன்று அடிப்படை வசதிகளான மின்சாரம், கழிப்பறை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 842 இடங்களில் 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெற உள்ளது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிவளவன், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: