தடை தாண்டுதல் போட்டியில் ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாதனை

திருப்பூர், மார்ச் 20: நேபாள நாட்டின் பொக்காரா பகுதியில் ‘யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் போரம் நேபாள்’ சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் உடுமலை ருத்ரவேணி  முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவன் தினேஷ் 110 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் உலக அளவில் முதலிடம் பிடித்தார். இதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதத்தில் கோவா மாநிலத்தில் நடைபெற்ற ‘யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் ஆப் இந்தியா’ அமைப்பின் சார்பாக தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் 110 மீ. தடை தாண்டி ஓட்டம் மற்றும் 400 மீ. தொடர் ஓட்டத்தில்  தங்கப்பதகத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதகத்தையும் வென்றுள்ளார். தேசிய அளவில் மூன்று போட்டிகளில் வெற்றி  மாணவர் தினேசுக்கு கல்லூரி சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில்  ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும், கல்லூரியின் இயக்குனர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணபிரசாத், ஆலோசகர் மஞ்சுளா, முதல்வர் கண்ணன், டீன் ராமநாதன், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் விளையாட்டுத் துறை இயக்குனர்கள் வெள்ளைச்சாமி, பெரியசாமி ஆகியோர் மாணவரை பாராட்டினர்.

Related Stories: