ரூ.4,727 கோடியில் போகாபுரம் விமான நிலையம் திறப்பு: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.4,727 கோடி செலவில் கட்டப்பட்ட அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து ெகாண்டு விமான நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் பிரதமரை வரவேற்கும் வகையில் 14 ஆயிரம் பழங்குடியின பெண்களின் கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் பேசியதாவது:

சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தலைமையின் கீழ், ஆந்திர பிரதேசத்தில் இரட்டை வளர்ச்சி நடைபெற்று வருகிறது. இரட்டை இன்ஜின் அரசால் ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சி வேகமாக தொடர்கிறது. கடந்த 2014க்கு முன் நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு, விமான நிலையங்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்தது. விமான நிலையங்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் சூட்டப்படவில்லை.

நாங்கள் அயோத்தி விமான நிலையத்திற்கு வால்மீகியின் பெயரை சூட்டினோம். போகாபுரம் விமான நிலையத்திற்கு அல்லூரியின் பெயரை சூட்டியுள்ளோம். நாங்கள் சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறோம். ‘உடான்’ திட்டம் விமான நிலையங்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, விமான பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.

விசாகப்பட்டினம் பொருளாதார மண்டலத்தை ஆசியாவின் மிகப்பெரிய தொழில் மையமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் ஆந்திர கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன்நாயுடு, மாநில அமைச்சர் நாரா லோேகஷ் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: