மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை…

கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஜூலை இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழையால், சுமார் 10 நாட்களுக்கு முன்பு 82 அடியாக இருந்த கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் தற்போது 102.90 அடியை கடந்துள்ளது. மழை தொடர்ந்தால், இன்னும் 15 நாட்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹாரங்கி அணை முழுமையாக நிரம்பியதால், அங்கிருந்து வினாடிக்கு 12,000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியிலிருந்து 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவிலும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27,115 கனஅடியாக பதிவாகியுள்ளது. இதையடுத்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 27,000 கனஅடியிலிருந்து 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் தற்போது 82.71 அடி நீர் இருப்பு பதிவாகியுள்ளது.

கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் தமிழகத்தை வந்தடைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், முழு கொள்ளளவை நெருங்கியுள்ள கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25,000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு வரும் காவிரி உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடி அதிகரித்துள்ளது. மேலும், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 25,000 கனஅடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: