×

மேகதாது அணை விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக வழக்கு: தலைமை செயலாளர், பேரவை செயலாளர் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: மேகதாது குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மான வலியுறுத்தப்பட்டது.  இந்நிலையில் இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் தமிழக தலைமைச் செயலாளர், சட்டமன்ற செயலாளர், மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : AIADMK ,Mekedadu Dam ,Chief Secretary ,Chennai ,Tamil Nadu Assembly ,Karnataka government ,Mekedadu ,Udhayanidhi Stalin ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு