- ரஜினிகாந்த்
- மோகன் சர்மா
- சென்னை
- இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
- புனே
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- பிலிம் சேம்பர்
சென்னை: புனே இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் மோகன் சர்மா. தமிழ்நாடு மற்றும் கேரளா அரசின் திரைப்பட விருதுகளை வென்றவர். ஃபிலிம் சேம்பர் தலைவராக பதவி வகித்திருந்த அவர், தற்போது தனது 80வது வயதில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதி ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார். இதுகுறித்து மோகன் சர்மா கூறுகையில், ‘சென்னை போயஸ் கார்டன் பகுதியில் எனக்கு வீடு இருந்தது. குடும்ப வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன். போயஸ் கார்டன் வீட்டை விற்றேன்.
அதிலும் பிரச்னை வந்தது. வயதான நிலையில் என் மனம் சோர்வடைந்து, கையில் காசு இல்லை. நோய் வந்தால், பக்கத்தில் இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துவிட்டது.ஜெயின் சமூகத்தினர் நடத்தும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் தங்குவதற்கு இடமும், சாப்பாடும் இலவசமாக கொடுக்கின்றனர். ஆனால் மருந்து, மாத்திரைகள் வாங்க என்னிடம் பணம் இல்லை. நான் இங்கு இருப்பதை ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வந்தது. அதை வைத்து வாழ்க்கையை நடத்துகிறேன்’ என்றார்.
