கெய்ரோ: குவைத்தில் உள்ள சீன கட்டிடத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஈரான், அமெரிக்கா போரில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் மீது அமெரிக்கா, சவுதி அரேபியா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் 20 போராளிகள் கொல்லப்பட்டனர்.
ஜோர்டானில் உள்ள முவாஃபக் சல்டி விமான படை தளம் மற்றும் அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தை குறி வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
குவைத்தில் உள்ள சீன நிறுவன கட்டிடம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே 3 அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.
