சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு காவல் துறை தடை விதித்தது. உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரியும் தி.க. வாகன பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் வாகன பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைமை அலுவலகமான பெரியார் திடலில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
