மணிகண்டம் ஒன்றியத்தில் 7 இடங்களில் தெருமுனை கூட்டம்: இந்திய கம்யூ., முடிவு

திருச்சி, மார்ச் 17: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் சோமரசம்பேட்டையில் நடந்தது. தேர்தல் பணிக்குழு கன்வினர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதில் சிவசூரியன், நடராஜன், சண்முகம், முருகன், வீரமுத்து உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு பணிகள் குறித்து விளக்கினார். இதில் திருவரங்கம் தொகுதி முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நோட்டீஸ் வீடுவீடாக விநியோகிப்பது, சோமரசம்பேட்டையில் மாநில தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது, மணிகண்டம் ஒன்றியத்தில் 7 மையங்களில் தெருமுனை கூட்டம் நடத்துவது முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: