மதுரை: மதுரையை சேர்ந்த இந்திரன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எனது மனுவை பரிசீலித்து, இலவச பேருந்து பயண அட்டை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்ற கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், ‘‘அரசு பேருந்துகளில் தற்போது மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஏன் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதில்லை. மனுதாரரின் மனுவை அரசு போக்குவரத்து துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனர்.
