சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவத்துறை உயர்கல்வியில் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் மருத்துவ துறையில், நமது மாநிலம் செய்திருக்கக் கூடிய தொடர் சாதனைகள் மூலம் ஏற்பட்டிருக்கும் வசதியை, வாய்ப்பை கைநழுவ விடுவதற்கு சமமானது. எனவே, மாநில அரசு சீராய்வு மனுவை உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திறமை மிக்க வழக்கறிஞர்கள் மூலம் இந்த உரிமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
