மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: ‘டெல்லியில் ஜூலை 20ம் தேதி மாணவர்கள் மீது நடந்த கொடூர தாக்குதலுக்கு அமித்ஷாதான் பொறுப்பு. மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மக்களவையில் நான் பேச அனுமதி தரப்படவில்லை. அவர்கள் ஒலிவாங்கியை அணைக்கலாம். ஆனால் மாணவர்களின் எதிரொலியை அணைக்க முடியாது. டெல்லியில் ஜூலை 20ம் தேதி மாணவர்கள் மீது நடந்த கொடூர தாக்குதலுக்கு அமித்ஷாதான் பொறுப்பு. டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டது யார்?

ஆணி பொருத்திய லத்திகளைக் கொண்டு மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும். மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதற்கு அமித்ஷாவே உத்தரவிட்டிருக்க வாய்ப்பு உள்ளது

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டம். அமித் ஷா மீது குற்றம்சாட்டி பேசியதற்காக எனது மைக் அணைக்கப்பட்டது. மன்னிப்பு கோரினால்தான் பேச அனுமதிக்க முடியும் என்றார்கள்; என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என தெரிவித்தார்.

Related Stories: