பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி: தேர்தல் வன்முறையில் ஒருவர் கொலை

 

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இதற்காக ‘கூட்டு அவாமி செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாகிஸ்தான் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரவாலகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி பேரணியாகச் செல்லத் தொடங்கினர். அதேவேளையில், நிலவும் பதற்றமான சூழலால் 2 மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தலை தேர்தல் அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

சுத்னோதி மற்றும் ரவாலகோட் ஆகிய தொகுதிகளில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. மிர்பூர் பிரிவில் நேற்று நடைபெற்ற தேர்தலில் வன்முறை வெடித்தது. கோட்லி மாவட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தொண்டர் முக்தார் யூனுஸ் கொல்லப்பட்டார். எதிர்க்கட்சிகள் வாக்குப்பெட்டிகளைக் கொள்ளையடித்ததாகவும், ஒன்றை எரித்ததாகவும், பிம்பர் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி பிஎம்எல்-என் கட்சியும் குற்றம் சாட்டியது.

Related Stories: