தவெகவுக்கு போகமாட்டோம்: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பேட்டி

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும், இபிஎஸ் நியமித்த புதிய மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் சுரேஷ்பாபு, ராதா செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று அளித்த பேட்டி:விழுப்புரத்தில் கட்சியை விட்டு நீக்கிய ஒரே மாதத்தில் பசுபதிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது விதிகளுக்கு புறம்பானது.

பொதுச்செயலாளராக இருக்க இபிஎஸ்சுக்கு தகுதியில்லை. அதனால்தான் தகுதியில்லாதவர்களை நியமித்து வருகிறார். தலைமையை மாற்ற வேண்டும். சசிகலா உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம். சி.வி.சண்முகமும் தவெக உள்ளிட்ட வேறு எந்த கட்சிக்கும் செல்ல தயாராக இல்லை. அதிமுகவில் இருந்து கட்சி பணியாற்றிவோம். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி எங்களை பற்றியும், சண்முகத்தை பற்றியும் பேசி வந்தால் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: