என் தொகுதிக்குள்ள யாராவது காலை வச்சீங்க…. ஜட்டியோட தூக்கி வெச்சு கொன்னு எடுத்துருவேன்…தவெக நிர்வாகிக்கு பெண் அமைச்சர் பகிரங்க மிரட்டல்

 

ராஜபாளையம்: தூக்கி ஜட்டியோட வச்சு அடிச்சு, கொன்னு வெளியே எடுத்துருவேன் என தவெக நிர்வாகிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுக்கும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி தவெக எம்எல்ஏவான ஜெகதீஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். இவர், சாத்தூர் தவெக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவிடம், ராஜபாளையம் தென்கிழக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் குறித்து தொலைபேசியில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரித்து பேசிய ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த ஆடியோ உரையாடல் வருமாறு:

ராஜகுரு: அம்மா வணக்கம், சொல்லுங்கம்மா.

அமைச்சர்: ஒரு விஷயம் கேட்கலாம்னு கால் பண்ணேன். தாசில்தார் ஆபிஸ்ல போயி ஒரு ஆபிசர பார்த்தீங்களோ?

ராஜகுரு: நான் போகலம்மா. லட்சுமணன் போயிருக்காம்மா

அமைச்சர்: லட்சுமணனா, என்ன சொன்னாப்ல?

ராஜகுரு: டிஎஸ்பி ஆபிஸ் போயிருக்கான். எல்லா ஆபிஸ்க்கும் போயிருக்கான். லட்டர் ெகாடுத்திருக்கான்.

அமைச்சர்: எந்த லெட்டர் கொடுத்திருக்காராம்?

அவர்: இல்லம்மா… லட்டு.. லட்டு..

அமைச்சர்: ராஜபாளையத்துல வந்து லட்சுமணன் லட்டு ெகாடுக்கிறதுக்கு, தாசில்தார் ஆபீஸ் ேபாறதுக்கு யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தா? தாசில்தார் இங்க வந்து எப்படி பேசுறது? சாத்தூர்காரர் இங்க வந்து என்ன பேசுறது?

ராஜகுரு: அம்மா நான் யூனியன் ஆபிஸ்ல கான்ட்ராக்ட் வேலை பார்க்கிறேன். அப்போ பிடிஓ என்கிட்ட அம்மா எப்ப வர்றாங்கன்னு கேட்டார். நான் கேட்டு சொல்றேன் அப்படிங்கிறதோட முடிச்சுக்கிட்டேன். அப்பதான் சொன்னாரு, யாரோ ஒன்றிய செயலாளர் சொல்லி லட்சுமணன் வந்தாங்க என்றார். அப்ப நான், அண்ணாச்சி யாரா இருந்தாலும், அந்தம்மா தான் தொகுதி எம்எல்ஏ, அவங்க தான் மாவட்ட செயலாளர். எதுவா இருந்தாலும், நாங்க அந்தம்மாகிட்ட ெசால்லிருவோம். அந்தம்மா உங்க கிட்ட பேசுவாங்க சார். அப்படினு சொல்லி முடிச்சிருக்குமா.

அமைச்சர்: நீங்க லட்சுமணன்கிட்ட போன் பண்ணி சொல்லிடுங்க. நான் லட்சுமணன் மேல கம்ப்ளைண்ட் எழுதிக்கொடுத்து உள்ள வச்சுபுடுவேன்.

ராஜகுரு: அம்மா உங்களுக்கு தெரியும்ல.

அமைச்சர்: என்னைய ஆரம்பத்தில் இருந்தே சீண்டிக்கிட்டு இருக்காப்ல. ஏற்கனவே, பொதுச் செயலாளர் 5 மாதத்திற்கு முன்பே திட்டினார். திரும்ப, திரும்ப என்ன செய்றார். என்னைய பார்த்தா எப்படி தெரியுது. என் தொகுதிக்குள்ள வந்து அதிகாரம் பண்ண யார் அதிகாரம் கொடுத்தா. என் தொகுதிக்குள்ள எப்படி அந்த பையன் வருவான்.

ராஜகுரு: இல்லம்மா, நீங்க 15ம் தேதி வருவீங்கள்ளம்மா, பிடிஓகிட்ட எதுவா இருந்தாலும் அந்தம்மாதான்னு சொல்லிட்டோம். அவங்க உங்க கிட்ட பேசுவாங்க.

அமைச்சர்: நீங்க அந்த பையன்கிட்ட பேசுவீங்களா, நம்பர் வச்சுருங்கீங்களா, கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணுங்க, நம்பர் ெகாடுங்க.

ராஜகுரு: அம்மா நாங்க கீரியும், பாம்புமா இருக்கோம்மா.

அமைச்சர்: வாட்ஸ்அப்ல நம்பர் போடுங்க.

ராஜகுரு: உங்களுக்கு அதிகாரம் இருக்கு. கூப்பிட்டு சத்தம் போடுங்க.

அமைச்சர்: நான் ஒண்ணும் பண்ண மாட்டேன். நான் தூக்கி வச்சு, ஜட்டியோட வச்சு அடிச்சு கொன்னு, வெளிய எடுத்துருவேன். ரிப்போர்ட்டரா இருக்கும் போதே இவன்… என்ன பார்க்கும் போது என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கா அவனுக்கு? அண்ணாச்சி, ஒரேயொரு விஷயம் தெளிவா சொல்றேன். என் தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரங்க கால கூட வைக்க விடமாட்டேன். அதை மட்டும் தெளிவா சொல்லிடுங்க. உள்ள ஒருத்தனும் கால வைக்கக் கூடாது. வச்சா உடனே ஆக்‌ஷன் எடுப்பேன். ஏற்கனவே போலீஸ்கிட்ட சொல்லி, அங்க சுத்தி விட்டுகிட்டுதான் வச்சுருக்கேன். இருங்க ஊருக்கு வந்துக்கிறேன். இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது.

தவெக சாத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவுடன், பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் ஆடியோ வெளியானதையடுத்தே அவர் நீக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவர் மீது தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடந்த 21ம் தேதியே கட்சியில் இருந்தே ராஜகுருவை விருதுநகர் மாவட்டச் செயலாளர் சின்னப்பர் தற்காலிகமாக நீக்கிவிட்டதாக தற்போது அறிக்கை வெளியாகி உள்ளது. இதேபோல அமைச்சர் ஜெகதீஸ்வரி மீதும் மற்றொரு பெண் அமைச்சர் கீர்த்தனாவுடன் தகராறில் ஈடுபட்டதும், தனது பெயரை பேனரில் 2வதாக போட்டதற்காக கலெக்டரிடம் மேடையிலேயே தகராறு செய்ததும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜாவுடன் படம் வந்தது என பல்வேறு புகார்கள் வெளியான நிலையில் தற்போது சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: