- கோயம்புத்தூர்
- வருமான வரி துறை அலுவலகம்
- யூனியன் அரசு
- கோவை ரேஸ்கோர்ஸ்
- மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்
- ஈஸ்வரன்
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து, கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் வெளிப்படையாக குரல் கொடுத்து, பிரதமர் மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்த வேண்டும். ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில், இனி கோவைக்கு எந்த ஒன்றிய அமைச்சர்கள் வந்தாலும் கருப்பு கொடி காட்டப்படும். தமிழக முதலமைச்சர் வெளிப்படையாக பிரதமர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை கண்டிக்க வேண்டும் என்றார்.
