×

ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை

 

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் விஜய் ஆலோசனை தொடர்ந்து அமைச்சர் பிரபு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்கஇத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Director of Geology and Mines ,Minister ,Prabhu ,Chief Minister ,Vijay ,Tamil Nadu ,
× RELATED அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி...