×

கடந்த ஆண்டு மட்டும் 107 உயர்கல்வி நிறுவனங்கள் ராக்கிங் விதிமுறைகளை மீறின: கல்வி அமைச்சகம் தகவல்

 

புதுடெல்லி: மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்த மஜும்தார் கூறுகையில், ‘ராக்கிங் தடுப்பு விதிமுறைகளின் கட்டாய விதிகளைப் பின்பற்றாததற்காக, 18 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 107 உயர்கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கோரும் அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து ராக்கிங் தடுப்பு உறுதிமொழிகளைப் பெறத் தவறியது, மற்றும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகள் இருந்தபோதிலும் நிறுவன ரீதியான இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதது போன்ற குறைபாடுகளை இந்த அறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன’ என்றார்.

டிக்கெட் ரத்து வருவாயை ரயில்வே பராமரிப்பதில்லை: டிக்கெட் ரத்து மற்றும் ரத்து செய்யப்படாத காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் திரும்பப் பெறப்படாத சூழலில் கிடைக்கும் வருவாய் குறித்த மண்டல வாரியான பதிவுகளை இந்திய ரயில்வே பராமரிப்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

 

Tags : Education Ministry ,New Delhi ,Lok Sabha ,Union Minister of State ,Education ,Sugandha Majumdar ,University Grants Commission ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...