நாட்டின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆணவமிக்க ஒரு அரசை பணிய வைத்துள்ளனர்…

டெல்லி: நாட்டின் இளைஞர்கள் ஒரு ஆணவமிக்க அரசை பணிய வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் இளைஞர்கள் தந்த நெருக்கடி காரணமாகவே தர்மேந்திர பிரதான் பொதுமக்களின் முன்னிலையில் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது என குறிப்பிட்டார்.

இந்த சூழலில் E20 எரிபொருள் தொடர்பான விவகாரத்திலும் தெளிவான விளக்கத்தை அளிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள் என பிரதமரை கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

E20 எரிபொருள் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்; அவர்களின் வாகனங்கள் பழுதாகின்றன.. எனவே, இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடைவதற்கு முன்பாக, பிரதமர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றார். இவ்விவகாரம் குறித்து அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள National Townhall Against E20- நிகழ்வில், இந்த எரிபொருள் கொள்கையைத் திரும்பப் பெற அரசை எவ்வாறு நிர்ப்பந்திப்பது என்பது குறித்த எதிர்காலச் செயல் திட்டத்தை தீர்மானிக்க உள்ளதாக கூறினார்.

 

Related Stories: