இளம்பெண் கடத்தலா? போலீஸ் விசாரணை

 

ஆரணி, ஜூலை 27: ஆரணி அருகே காணாமல் போன இளம்பெண்ணை யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரித்து போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, இளம்பெண்ணின் தாய் ஆரணி தாலுகா போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.

 

Related Stories: