அரசுடன் கருத்து வேறுபாடு வங்கதேச அதிபர் ராஜினாமா

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் புரட்சி காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடத்திய தேர்தலில் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபர் முகமது ஷஹாபுதின் மட்டும் பதவியில் நீடித்து வந்தார்.

2023ல் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவருக்கு இருந்ததாகக் கருதப்படும் தொடர்புகள் காரணமாக தற்போதைய தாாிக் ரஹ்மான் அரசுக்கும், அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் ஷேக்ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்தார். அவரிடம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இது வங்கதேச புதிய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று திடீரென அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ராஜினாமா செய்தார்.

Related Stories: