×

கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஹெட்மயர் ஆட்ட நாயகன்

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.பிரிட்ஜ் டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச… நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன் குவித்தது. டாம் லாதம் 69, நிக் கெல்லி 64, வில் யங் 56 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 69 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார் (64 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்). ரூதர்போர்டு 61, கேப்டன் ஹோப் 39, அக்கீம் அகஸ்டி 34, கிரீவ்ஸ் 22, கார்ட்டி 20 ரன் எடுத்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியின் ஜேடன் லெனாக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Tags : West Indies ,Hetmyer ,Bridgetown ,New Zealand ,Kensington Oval ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒன்டே: 2...