பெய்ஜிங்: சீனா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் சக வீராங்கனை உன்னட்டி ஹூடாவுடன் (18 வயது) மோதிய சிந்து 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் 56 நிமிடம் போராடி வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-5, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் 11வது ரேங்க் வீரர் அல்வி பர்ஹானை (இந்தோனேசியா) 57 நிமிடம் போராடி வென்று அதிர்ச்சி அளித்தார்.
