×

ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் டி.20 போட்டியில் நாளை இந்தியா மோதல்: வெற்றி கணக்கை தொடங்குவாரா ஸ்ரேயாஸ்?

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி ஹராரே மைதானத்தில் நாளை நடக்கிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் திலக்வர்மா, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சிவம்துபே, இஷான் கிஷன், ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ் வேகத்தில் பிரின்ஸ் யாதவ், அறிமுக வீரராக அசோக்சர்மா , ரவி பிஷ்னோய் ஆடு்ம்லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.மேலும் ரிங்குசிங், மயங்க் யாதவ், யாஷ் தாகூர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் 15 பேர் கொண்டஅணியில் இடம்பிடித்துள்ளனர்.

சூர்யகுமாருக்கு பின்னர் டி.20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்குஎதிராக 2-0, இங்கிலாந்துக்குஎதிராக 4-0 என ஒயிட்வாஷ் ஆனது. ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. நாளை ஸ்ரேயாஸ் வெற்றிக்கணக்கை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.மறுபுறம் ஜிம்பாப்வே அணியை குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கைஅணிகளை வீழ்த்தியது. சொந்த மண்ணில்ஆடுவது கூடுதல் பலமாக இருக்கும்.

சிக்கந்தர் ராசா தலைமையிலான அணியில் பிரையன் பென்னட், ரியான் பர்ல், பென் கரன், பிராட் எவன்ஸ், கிளைவ் மடாண்டேபேட்டிங்கிலும், முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, மில்டன் ஷும்பா பவுலிங்கிலும் இந்தியாவுக்கு நெருக்கடிஅளிப்பர். இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியை யூனிட்8 ஸ்போர்ட்ஸ்,ஃபான்கோட் ஆப் அல்லது இணையதளத்தில் பார்க்கலாம். 2வது டி.20 போட்டி வரும் 25ம் தேதியும், கடைசி போட்டி 26ம் தேதியும் ஹராரே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

விவிஎஸ் லட்சுமணன்…
ஜிம்பாப்பே தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுகிறார். பேட்டிங் பயிற்சியாளராக கனிட்கர், பவுலிங் கோச்சாக சுனில் ஜோஷி செயல்படுகின்றனர்.

இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு!கேப்டன் ரசா பேட்டி
இந்தியாவுக்கு எதிரான டி.20 தொடர் குறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசாகூறியதாவது: “இந்ததொடரில் இரு நாடுகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜிம்பாப்வே மிகவும் சீரான மற்றும் விறுவிறுப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால், இத்தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். வெற்றி அல்லது தோல்வி என்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்றாலும், தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.

ஹராரே ஸ்டேடியத்தில்…
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே 64 டி.20 போட்டிகளில் ஆடி 18ல் வென்றுள்ளது. 44ல் தோல்வி அடைந்திருக்கிறது. 2 போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தியா இங்கு 12 போட்டியில் ஆடி 9ல் வெற்றி,3ல் தோல்வி அடைந்துள்ளது.

நேருக்கு நேர்….
*இருஅணிகளும் இதற்கு முன் 14 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 11ல் இந்தியா, 3ல் ஜிம்பாப்வே வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியிலும் இந்தியா தான் வென்றுள்ளது.
*இந்தியா முதலில் பேட் செய்த 6, சேசிங்கில் 5ல் வென்றுள்ளது.
*அந்தஅணிக்குஎதிராக கடந்த உலக கோப்பையில் சென்னையில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா 256/4 ரன் குவித்தது தான் அதிகபட்சமாகும்.
*ஜிம்பாப்வே-ல் அந்த அணிக்குஎதிராக இந்தியா இதற்கு முன் 4 முறை டி.20தொடரில் ஆடி உள்ளது. இதில் 2010ல் 2-0, 2016ல் 2-1, 2024ல் 4-1 என தொடரை வென்றுள்ளது. 2015ல் 2 போட்டி கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.

Tags : India ,Zimbabwe ,T20I ,Shreyas ,Harare ,cricket ,Harare stadium ,Indian ,Tillakaratne Verma ,Abhishek Sharma ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒன்டே: 2...