×

விவசாய சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: விவசாய சங்க நிர்வாகிகள், இலங்கை எம்பி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் ஈரோடு தெய்வசிகாமணி தலைமையில் தமிழ்நாடு காவிரி விசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கவுரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.

அதேபோல், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ.சுமந்திரன் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Farmers' Association ,MK Stalin ,Chennai ,Association ,DMK ,President ,Tamil Nadu ,All Farmers' Associations ,Movement ,Erode Deivasikamani ,Cauvery ,Visayas ,L. Palaniyappan ,S. Ramadoss ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...