×

கள் இறக்க அனுமதி குறித்து நடவடிக்கை: அமைச்சர் தகவல்

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் நேற்று அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில். ‘‘தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி, கோயில்கள் பகுதியில் உள்ள சுமார் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதலுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Kinathukadavu ,Minister ,Vignesh ,Kinathukadavu, Coimbatore district ,Tamil Nadu ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...