- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தூத்துக்குடி, சிவகங்கை
- சென்னை
- உள்துறை செயலாளர்
- மணிவாசன்
- தூத்துக்குடி
- சிவகங்கை
- திருச்சி ஆயுதப்படைகள் தோண்டுதல்…
சென்னை: தூத்துக்குடி மற்றும் சிவங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ்பிக்கள் உட்பட தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாகவும்,
சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த சிவபிரசாத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட எஸ்பியாகவும், சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்பியாக இருந்த சண்முக பிரியா மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் எஸ்பியாக இருந்த மீரா காவல்துறை தானியக்கமாக்கல் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
