×

ஜனநாயகன் இன்று வெளியீடு தவெகவினர் தடபுடல் ஏற்பாடு

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியிடப்படுகிறது. இதையொட்டி, தவெகவினர் தடபுடலாக ஏற்பாடு செய்து வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படம், தேர்தலுக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் போர்டு பிரச்னையால் வெளியாகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தின் வெளியீட்டை திருவிழா போல் தவெகவினர் கொண்டாட வேண்டும், என அமைச்சர் ஆனந்த் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இந்த படத்தின் முதல்நாள், முதல் காட்சியை பார்க்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. சென்னையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று காலை படத்தை பார்க்கிறார். அதேபோல, தவெகவினரும் படத்தை பார்க்க போட்டி போட்டு வருகின்றனர்.

இதனால் அனைத்து தியேட்டர்களிலும் புக்கிங் முடிந்து விட்டது. டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. சென்னை மட்டுமல்லாது அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் நிர்வாகிகளுடன் சேர்ந்து படம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால்தான் தவெகவினர் ஜனநாயகன் படத்தை பார்க்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்காக அமைச்சர்கள் இன்று 3 மணி நேரம் விடுமுறை எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே பேட்டி அளித்திருந்தனர். இன்று அவர்கள் படம் பார்த்த பிறகுதான் அடுத்தகட்ட பணிகளையே தொடங்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். படத்தை விஜய் ரசித்தார்…: இதற்கிடையில், சென்னை அடையாறில் உள்ள தாகூர் பிலிம் சென்டரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் விஜய் ஜனநாயகன் படத்தை பார்த்து ரசித்தார்.

Tags :
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...