×

நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் முதல்வர் கலைஞர் சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டி தொகையை கொண்டு, மாதம்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவி தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30வது புத்தக காட்சியை 2007ம் ஆண்டு திறந்து வைத்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கினார். மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டி தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம்.

அதன்படி, இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,President ,MK Stalin ,Kalaignar Foundation ,Chennai ,Kalaignar Karunanidhi Foundation ,Chief Minister ,Kalaignar ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...